நியுசிலாந்து: பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் ஷஹீத் - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

நியுசிலாந்து: பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் ஷஹீத்


நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச்சில் இயங்கி வரும் அல்நூர் மற்றும் லின்வுட் பள்ளிவாசல்களில் இரு வலதுசாரி கடும்போக்காளர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களால் 49 பேர் உயிரிழந்து 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது வரை சம்பவம் தொடர்பில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை நாளைய தினம் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக நியுசிலாந்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.


துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பேஸ்புக் ஊடாக நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment