கஞ்சிபானை இம்ரான் நாடு திரும்பிய நிலையில் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 28 March 2019

கஞ்சிபானை இம்ரான் நாடு திரும்பிய நிலையில் கைது!


டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு நாடு திரும்பிய நிலையில் கஞ்சிபானை இம்ரான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கஞ்சிபானை இம்ரான் திருப்பியனுப்பப்படுவதையறிந்து விமான நிலையத்தில் காத்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மாலை தீவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிருந்ததாகவும் தெரிவிக்கின்ற பொலிசார் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் தொடர்வதாக தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a comment