எங்களை மீறித்தான் இனி முஸ்லிம்களை தொட வேண்டும்: ஒன்றுபட்ட நியுசிலாந்து! - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

எங்களை மீறித்தான் இனி முஸ்லிம்களை தொட வேண்டும்: ஒன்றுபட்ட நியுசிலாந்து!


கடந்த வெள்ளிக்கிழமை நியுசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டுத் தலைமையும் அரசும் மிகத் துணிச்சலான நிலைப்பாட்டையெடுத்து, எதிர்காலத்தில் தமது நாடு பிளவுறா வண்ணம் செயல்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியில் இன்றைய தினம் கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் 30 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் பாரிய அளவிலான மக்கள் ஒன்று கூடியிருந்த நிலையில் ஜும்மா தொழுகையும் இடம்பெற்றிருந்தது.அத்துடன், முஸ்லிம் சமூகத்துடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பெரும்பாலான நியுசிலாந்து பெண்கள் இன்று தலையை மறைந்து ஸ்கார்ப் அல்லது ஹிஜாப் அணிந்திருந்தனர். இது பற்றி விளக்கமளித்த நியுசிலாந்து பிரஜையொருவர், இன்று தாம் விரும்பியே தலையில் ஸ்கார்ப் அணிந்ததாகவும் அதற்கான ஒரே காரணம், அடுத்த தடவை இவ்வாறு தாக்குதல் நடாத்த வருபவர்களுக்கு யார் முஸ்லிம் யார் முஸ்லிம் அல்லாதவர் என்ற வித்தியாசம் தெரியக்கூடாது ஏனெனில் நாங்கள் எல்லோருமே நியுசிலாந்தியர்கள் என விளக்கமளித்துள்ளார்.


இனியொரு தடவை பயங்கரவாதிகள் துப்பாக்கியை நீட்டுவதாக இருந்தால் முதலில் எங்களைத் தாண்டித்தான் முஸ்லிம்களைத் தொட வேண்டும் எனவும் நியுசிலாந்தியர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமையானது மேற்குலக நாடுகளில் பாரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது. நியுசிலாந்து வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் விதமும், நாட்டின் பிரதமர் அதனை வழி நடாத்தும் விதமும் உலகைக் கவர்ந்துள்ள அதேவேளை துருக்கியில் தேர்தல் காலம் என்பதால் இவ்விடயத்தை முன் வைத்து அந்நாட்டில் வீராவேச பேச்சுக்கள் பேசப்படுவது மனித ஆர்வலர்களை முகம் சுளிக்க வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment