பார்லிமன்ட் ஜோக்ஸ் திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் "ரஞ்சன்" : கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 March 2019

பார்லிமன்ட் ஜோக்ஸ் திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் "ரஞ்சன்" : கம்மன்பிலஅவ்வப்போது மக்களைக் குழப்பும் வகையிலான தகவல்களை வெளியிட்டு வரும் ரஞ்சன் ராமநாயக்க, அரச ஏற்பாட்டில் நடித்துக்கொண்டிருக்கும் புதிய திரைப்படமே பார்லிமன்ட் ஜோக்ஸ் எனவும் அவர் அங்கு பேசும் விடயங்களை மக்கள் பெரிதுபடுத்தத் தேவையில்லையெனவும் தெரிவிக்கிறார் கம்மன்பில.


நாடாளுமன்றில் உள்ளவர்கள் கொகைன் பாவிப்பதாக கூறும் ரஞ்சன் பெயர் பட்டியலை வெளியிடவில்லை, இது போலவே இதற்கு முன்னரும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பற்றியும் கருத்துரைத்த ரஞ்சன், இல்லாததையும் பொல்லாததையும் அரசாங்கத்தின் தேவைக்காக இட்டுக் கட்டுவதாக கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

கொகைன் உபயோகிகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை சபாநாயகருக்கு வழங்கப்படவில்லையென்பதோடு அது தொடர்பில் பொலிசில் முறையிட்டிருப்பதாக ரஞ்சன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment