நியுசிலாந்து தாக்குதல்: ட்ரம்ப் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

நியுசிலாந்து தாக்குதல்: ட்ரம்ப் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்


நியுசிலாந்து. கிறிஸ்ட்சேர்ச் பிரதேசத்தில் இரு பள்ளிவாசல்கள் மீது இன்று நடாத்தப்பட்டிருந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.


டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்காவிலும் வெள்ளையின மேலாதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் வலதுசாரி தீவிரவாத தாக்குதலுக்கு இன்று நியுசிலாந்தில் 49 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 20 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில், ட்ரம்ப் இத்தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், ஜேர்மனி, ஸ்கொட்லாந்து, இந்தோனேசியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் தலைவர்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment