அக்குறணையில் மருத்துவ வழிகாட்டல் கருத்தரங்கு - sonakar.com

Post Top Ad

Thursday, 28 March 2019

அக்குறணையில் மருத்துவ வழிகாட்டல் கருத்தரங்கு


அண்மைக் காலமாக இலங்கை வாழ் சில மக்களிடம், குழுமங்களிடம் மருத்துவம் தொடர்பான பிழையான கருத்து,  தவறான வழிகாட்டல்கள் ,சிந்தனைகள் வேகமாக மக்கள் தளத்தில் பரப்பப்படுகின்றன.

"எந்தவொரு நோயை அல்லாஹ் இறக்கினாலும் அதற்கு நிவாரணத்தை இறக்காமல் இல்லை" என்பது இஸ்லாத்தின் வழிகாட்டல். "உங்களது உலக விவகாரங்களை நீங்கள் நன்கறிந்தவர்கள்" என்பதும் இஸ்லாத்தின் போதனை. வரையறைகளைப் பேணி விடயங்களைக் கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது காலத்தின் தேவை. அதற்கான முறையாக வழி நாடத்தப்பட வேண்டும் என்பது சமூகக் கூட்டுப் பொறுப்பாகும். என்பதனாலே இந்த நிகழ்வு அக்குறனை சுகாதார சபை (Akurana Health Committee) The Young Friends (TYF) அமைப்பும் இணைந்து ஊர் மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின்  பிரதான பேசு பொருளாக:

-இஸ்லாம் கற்றுத்தரும் ஆரோக்கியமும் மருத்துவமும்
-சுதேச நவீன மருத்துவ முறைகளின்  உண்மை நிலை
-எமது சமூகத்தின் முறையற்ற வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் நோய்கள் மற்றும் அது தொடர்பாக எதிர்கால மாற்றங்கள் எப்படி இருக்க வேண்டும்
- மக்கள்  மத்தியில் பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட நோய்களும் அதற்கான சரியான வழிமுறைகளும் போன்ற பல மருத்துவம் தொடர்பான விடயங்கள் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களால் தெளிவுபடுத்தப்படும்.

இந்நிகழ்வு அக்குறனை ஜம்மியதுல் உலமாவின் ஒத்துழைப்புடன் அக்குறனை அஸ்னா பள்ளியில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06.04.2019 சனிக்கிழமை காலை 8.30 மணி  முதல் நண்பகல் 12.30 (லுஹர் தொழுகை) வரை நடாத்த தீர்மானித்துள்ளோம். 

இந்நிகழ்வு ஆண்களுக்கும் பெண்களுக்கும்(பிரத்தியேக இடம் ஏற்பாடு செய்யப்படுள்ளது)சேர்த்து நடாத்தப்படவுள்ளது. 

-A Raheem Akbar

No comments:

Post a comment