புத்தளம் குப்பை விவகாரம்: கொழும்பில் ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 March 2019

புத்தளம் குப்பை விவகாரம்: கொழும்பில் ஆர்ப்பாட்டம்புத்தளத்திற்கு இம்மாதம்  22ஆம் திகதி வர திட்டமிட்டுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, அதற்கிடையில் அருவைக்காட்டு குப்பை திட்டத்திட்டத்திற்கு முடிவு தராவிட்டால் வருகை தொடர்பில் அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என க்ளின் புத்தளம் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இன்று காலை (19) புத்தளத்திலிருந்து சுமார் 25 பஸ்களிலும் வேறு பல வாகனங்களிலும் கொழும்பு வந்து காலி முகத்திடலுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்த புத்தள மாவட்ட மக்களின் பேரணியின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 


சிங்கள தமிழ், முஸ்லிம்கள் என்ற இன பேதமின்றி மத குருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

புத்தளம் குப்பைக்கு எதிரான சுலோக அட்டைகளையும் தாங்கிருந்த இவர்கள் கொழும்பு காலி முகத்திடலில்  ஒரு அங்கத்திலிருந்து மறு அங்கம் வரை கோசமிட்டு ஊர்வலமாக சென்றனர். பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு இருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தேவைக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். 

பொதுமக்களின் பிரதிநிதிகள் அடங்கிய 07 பேர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மேலதிக செயலாளர் சமந்தி கருணாதாசவுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். புத்தளத்தின் நிலமை தொடர்பில்  அவர்கள் விளக்கியதுடன் இந்த திட்டத்தை ஜனாதிபதி நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

-சப்னி அஹமட்

No comments:

Post a Comment