மொரட்டுவயில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

மொரட்டுவயில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!


மொரட்டுவ, பிலியந்தல வீதி பகுதியில் இன்று காலை 10.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


55 வயது தந்தை ஒருவரும் 27 வயது மகனின் நண்பரும் உயிரிழந்துள்ள அதேவேளை குறித்த நபரின் புதல்வர் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வழமை போன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே துப்பாக்கிச் சூட்டை நடாத்தி விட்டு தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment