ஸ்ரீலசுக - பெரமுன இடையே 'உத்தியோகபூர்வ' பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

ஸ்ரீலசுக - பெரமுன இடையே 'உத்தியோகபூர்வ' பேச்சுவார்த்தை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இன்று நல்ல முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.


இரு தரப்பும் பல இணக்கப்பாடுகளை எட்டியுள்ள அதேவேளை எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் சந்திக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்கும் வகையிலான சிறப்பான கூட்டணியொன்று உருவாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலசுக ஜனாதிபதி வேட்பாளராக மைத்ரிபால அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெரமுனவினர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்ற நிலையில் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment