அட்டாளைச்சேனையில் இரத்த தான முகாம் - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

அட்டாளைச்சேனையில் இரத்த தான முகாம்


அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியா அமைப்பினால் மாபெரும் இரத்தான முகாம்2019.02.23ஆந் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.


குறித்த இரத்ததான நிகழ்வு கடந்த மாதம் நடைபெறவிருந்தும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது. 

ஜம்இய்யத்துத் தர்பிய்யா நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ள இரத்தான முகாமில் இரத்தக் கொடை வழங்குவதுக்கு பெருமளவானவர்கள்ஆர்வத்துடன் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக அமைப்பின் தலைவர் அஷ்ஷேஹ்எம்.ஏ.முபீன்(ஷஹ்வி) தெரிவித்தார். 

மேற்குறித்த இரத்ததானமுகாம் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவுடன் இணைந்து நடாத்தப்படுகின்றது.  கடந்த பல வருடங்களாக இவ்வமைப்பினால் தொடர்ந்து இரத்ததான  முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு தந்களது பங்களிப்பினூடாக உயிர்காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-றிசாத் ஏ காதர்

No comments:

Post a comment