கோலான் குன்றுகள் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம்: ட்ரம்ப் - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

கோலான் குன்றுகள் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம்: ட்ரம்ப்


ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து சர்ச்சையைக் கிளப்பிய டொனால்ட ட்ரம்ப் தற்போது 1981ம் ஆண்டு இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட சிரிய நிலப்பகுதியான கோலான் குன்றுகளை இஸ்ரேலுக்கே சொந்தமென அறிவிப்பதற்கான நேரம் கனிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.பலவீனமடைந்து செல்லும் அமெரிக்க ஆதிக்கத்தை நிலை நிறுத்த 1990 முதல் மத்திய கிழக்கில் இரத்த வெள்ளத்தை உருவாக்கி அதன் மூலம் தன்னை ஆதிக்க சக்தியாக நிலை நிறுத்த முனைந்து வரும் அமெரிக்கா, சிரியாவில் ரஷ்யாவின் தலையீட்டினால் தமது திட்டம் பலிக்காத நிலையில் அதனைப் புதிய திசை நோக்கித் திருப்ப முயற்சிக்கிறது.

இந்நிலையில், ஐ.எஸ் அமைப்புக்கான போரும் முடிந்து விட்டதாக அறிவித்து, இராணுவத்தை மீளப்பெறுவதாக தெரிவிக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் ஊடாக மத்திய கிழக்கு வரைபடத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பதன் தொடர்ச்சியில் தற்போது கோலான் குன்றுகளை இஸ்ரேலுக்குச் சொந்தமாக்க முனைகின்றமையும் அமெரிக்காவைத் தவிர உலக நாடுகள் இதனை கடந்த 40 ஆண்டுகளாக நிராகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment