ஜனாதிபதி தலைமையில் நாளை 'கொகைன்' அழிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 31 March 2019

ஜனாதிபதி தலைமையில் நாளை 'கொகைன்' அழிப்புநாட்டில் தொடர்ச்சியாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் கருப்புச் சந்தையைச் சென்றடைவதாக அரசியல் மட்டத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாளைய தினம் சப்புகஸ்கந்தயில், ஜனாதிபதி தலைமையில் 729 கிலோ கொகைன், பகிரங்கமாக பொது மக்கள் முன்னிலையில் அழிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகள் நிமித்தம் உடனடியாக இவ்வாறான அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment