இன்னும் 5 - 6 வருடங்கள் கிடைத்தால் அபிவிருத்தி நடக்கும்: ரணில்! - sonakar.com

Post Top Ad

Sunday, 31 March 2019

இன்னும் 5 - 6 வருடங்கள் கிடைத்தால் அபிவிருத்தி நடக்கும்: ரணில்!நாட்டினைத் துரிதமாக அபிவிருத்தி செய்து முடிக்க தனக்கு மேலும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


வீரவிலயில் இடம்பெற்ற யொவுன்புர நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், திடமான பொருளாதாரம் இருந்தாலேயெ எடுக்கும் கடன்களை அடைக்க முடியும் எனவும் நாட்டை ஸ்திரப்படுத்த நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்பின்னணியில் தமக்கு மேலும் ஐந்து அல்லது ஆறு வருட கால அவகாசம் தேவைப்படுவதாக ரணில் தெரிவிக்கின்றமையும் 100 நாள் ஆட்சியில் நாட்டை முன்னேற்றப் போவதாக கூட்டாட்சியினர் 2015ல் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment