பால் மாடுகள் இறக்குமதியில் 1310 மில்லியன் மோசடி! - sonakar.com

Post Top Ad

Sunday, 31 March 2019

பால் மாடுகள் இறக்குமதியில் 1310 மில்லியன் மோசடி!


பால் மாடுகள் இறக்குமதியெனும் போர்வையில் கடந்த வருடம் வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்று தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 1310 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஊழல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது அகில இலங்கை விவசாயிகள் சங்கம்.2018 மே மாதம் 9ம் திகதி பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ள இந்நிறுவனம் இதுவரை பால் மாடுகளை இறக்குமதி செய்யவில்லையெனவும், அவ்வாறு நிதி வழங்கியதை அரசாங்கம் மறுப்பதாகவும் தம்மிடம் அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவிக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து ஊக்குவிப்பு உதவியாக பால்மாடுகள் வழங்கப்பட்டிருந்த அதேவேளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்படும் பால் மாவையே நுகர்வோர் அதிகம் விரும்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment