சு.கட்சியிலிருந்து 'கை-கோர்த்தவர்களுக்கு' அமைச்சுப் பதவிகள்: UNP - sonakar.com

Post Top Ad

Monday, 25 March 2019

சு.கட்சியிலிருந்து 'கை-கோர்த்தவர்களுக்கு' அமைச்சுப் பதவிகள்: UNPதேசிய அரசமைத்திருப்பதன் ஊடாக அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய அரசில் கை கோர்த்துள்ள முக்கிய நபர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.இப்பின்னணியில், ஏ.எச்.எம். பௌலி, விஜேமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோரின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஐ.தே.க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 26ல் மாற்று அரசை நிறுவ முனைந்து நீதிமன்ற தலையீட்டினால் தோல்வி கண்ட மைத்ரி, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியமைக்க அனுமதித்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு பதவி தரப் போவதில்லையென மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment