நாவலப்பிட்டி ஷம்லா முஹமது ஜவ்பர் 9 ஏ சித்தி - sonakar.com

Post Top Ad

Thursday, 28 March 2019

நாவலப்பிட்டி ஷம்லா முஹமது ஜவ்பர் 9 ஏ சித்தி


நாவலப்பிட்டி சென் மேரிஸ் பாடசாலை மாணவி  முஹமது ஜவ்பர் ஸம்லா க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலையில் சகல பாடங்களிலும் சிறந்த புள்ளிகளையே தொடர்ந்தும் பெற்று வந்துள்ளார்.மிகவும் வறுமையான வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்த இந்த மாணவி பல கஸ்டங்களுக்கு மத்தியிலேயே தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.எனினும் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்  , பெற்றோர் தந்த ஆதரவும், எல்லாம் வல்ல இறைவனின் நாட்டமுமே, தான் இந்த பெறுபேரை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது என்றும் அதற்காக அனைவருக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளதாகவும்  கூறும் ஸம்லா என்ற இந்த மாணவி எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதை தனது இலட்சியம் எனவும் தெரிவித்தார்.

-ஜே.எப்.காமிலா பேகம்

1 comment:

Post a comment