ஏப்ரல் 01 முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 31 March 2019

ஏப்ரல் 01 முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு


ஏப்ரல் மாதம்  (01) திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக்  கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின்போது, 300 ரூபா அறவிடப்பட்டு வந்தது. இந்தத் தொகையுடன் மேலும் 500 ரூபா சேர்க்கப்படுவதால், கடவுச்சீட்டின் கட்டணம் 
3,500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. 

இதேவேளை, ஒரு நாள் சேவைக்காக, இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டு வந்தது. இச்சேவைக்கு மேலும் 5 ஆயிரம் ரூபா சேர்க்கப்படுவதால், கடவுச்சீட்டின் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்  சுட்டிக்காட்டியுள்ளது.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment