என்னை விட கோட்டாபே தகுதியானவர்: பசில் - sonakar.com

Post Top Ad

Saturday, 23 March 2019

என்னை விட கோட்டாபே தகுதியானவர்: பசில்


அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு தன்னை விட சகோதரன் கோட்டாபே ராஜபக்சவுக்கு தகுதியிருப்பதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.கடந்த ஜனாதிபதி தேர்தலில் சகோதரன் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்றதாகவும் இரவோடிரவாக மனைவியுடன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ச தொடர்ந்தும் அமெரிக்க பிரஜாவுரிமையுடனேயே இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடவுள்ளதாக கோட்டாபே தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜபக்ச குடும்பம் சந்தித்துக் கலந்துரையாடி கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு ஏகமாக இணக்கம் கண்டுள்ளதாகவும் பசில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment