3 வயது குழந்தை முதல் 71 வயது முதியவர் வரை பலி கொண்ட பயங்கரவாதம் - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

3 வயது குழந்தை முதல் 71 வயது முதியவர் வரை பலி கொண்ட பயங்கரவாதம்


நியுசிலாந்தில் வெள்ளிக்கிழமை மார்ச் 15ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 3 வயது குழந்தை, 14 வயது சிறுவன், 21 வயது இளைஞன் மற்றும் 71 வயது முதியவர் வரை பலியாகியுள்ளனர்.


குடிவரவாளர்களுக்கு எதிரான தீவிரவாத வலதுசாரி பயங்கரவாதியான பிரன்டன் 2011ம் ஆண்டு முதல் பாகிஸ்தான், துருக்கி, வடகொரியா உட்பட பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்து தனது சித்தார்ந்தத்துக்கு ஏதவான முரண்பாடான விடயங்களை உள்வாங்கிய நிலையில் நேற்றைய தினம் நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடாத்தியிருந்தமை உலகை உலுக்கியுள்ளது.


இந்நிலையில், இச்சம்பவத்தில் மூன்று முதல் எழுபத்தொரு வயதானவர் வரை உயிரிழந்துள்ளதுடன் பெண்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர். நியுசிலாந்து அரசு உடன் நடவடிக்கையில் இறங்கியுள்ளதோடு இன்றைய தினம் பாதிக்கப்பட்ட பிரதேச முஸ்லிம்களை நேரில் சந்தித்து துயர் பகிர்ந்துள்ளார் அந்நாட்டின் பிரதமர்.இதேவேளை, இத்தாக்குதலை ஆதரித்து குடிவரவாளர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய செனட்டர் பிரேசர் அனிங் மீது 17 வயது அவுஸ்திரேலிய இளைஞன் ஒருவர் முட்டைத் தாக்குதல் நடாத்தியுள்ளமையும் ஆஸி அரசு செனட்டரின் கூற்றுக்களை கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment