கண்டி - ஹ'தோட்டை நெடுஞ்சாலைக்கு சீனாவிடமிருந்து $1 பில்லியன் கடன்! - sonakar.com

Post Top Ad

Saturday, 23 March 2019

கண்டி - ஹ'தோட்டை நெடுஞ்சாலைக்கு சீனாவிடமிருந்து $1 பில்லியன் கடன்!

Image result for hambantota port china

கண்டி - ஹம்பாந்தோட்டை துறைமுகம் இடையேயான நெடுஞ்சாலை அமைக்க 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்சிம் வங்கியிலிருந்து இலங்கை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது இலங்கை.


சீனாவின் பட்டுப் பாதை திட்டத்தின் கீழ் ஆசிய - ஆபிரிக்க பிராந்தியங்களில் துறைமுகங்கள் வலையமைப்பை சீனா உருவாக்கி வருகிறது. அதனடிப்படையில் இலங்கை உட்பட பல்வேறு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் துறைமுக அபிவிருத்தியில் முதலிட்டு அவற்றை நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனா பொறுப்பேற்று வருகிறது.

இப்பின்னணியில், மத்திய மாகாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment