பௌமி - ரம்சி உட்பட இன்டர்போல் சிவப்பு நோட்டிஸ் பட்டியலில் 14 இலங்கையர் - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

பௌமி - ரம்சி உட்பட இன்டர்போல் சிவப்பு நோட்டிஸ் பட்டியலில் 14 இலங்கையர்


பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் இலங்கை உட்பட வேறு சில நாடுகளாலும் தேடப்படும் 14 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் இணையத் தகவல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இதில் ரம்சி முஹமத் (கொழும்பு) மற்றும் முஹமத் பௌமி (எலபொடகம) எனும் இருவர் உள்ளடங்குவதோடு கொஸ்கொட சுஜி, எமில் காந்தன், தர்மசீலன், ராமசாமி மாதவன், உதயகுமார், தர்மலிங்கம் சன்முகம், விஜயராஜா என தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.


கனடா, இந்தியா, ரொமானியா, இலங்கை உட்பட்ட நாடுகளால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக குறித்த நபர்கள் தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment