நடந்து கொண்டிருப்பது 'சுதேசி - விதேசி' பிரச்சினை: மைத்ரி! [video] - sonakar.com

Post Top Ad

Sunday, 9 December 2018

நடந்து கொண்டிருப்பது 'சுதேசி - விதேசி' பிரச்சினை: மைத்ரி! [video]


தற்சமயம் நிலவும் அரசியல் சூழ்நிலையை பலரும் தவறாக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இது தமக்கும் ரணிலுக்குமிடையிலான பிரச்சினையன்று மாறாக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் என தெரிவிக்கிறார்.


மைத்ரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் இன்று பொலன்நறுவயில் வைத்து கோரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி நீதிமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரா இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான வாக்குறுதியுடன் ஆட்சிபீடமேறிய மைத்ரி, ஒக்டோபர் 26ம் திகதி சர்வாதிகாரியாக உருவெடுத்ததன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியை விரும்பாத சக்திகளும் தற்போது ஜனநாயக போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment