13ம் திகதி கொழும்பில் UNPன் மக்கள் பேரணி - sonakar.com

Post Top Ad

Sunday, 9 December 2018

13ம் திகதி கொழும்பில் UNPன் மக்கள் பேரணி


எதிர்வரும் 13ம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் பாரிய மக்கள் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.


12ம் திகதி நாடாளுமன்ற அமர்வின் போது ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ள நிலையில் தமது கட்சியின் பிரதமர் தெரிவு ரணில் விக்கிரமசிங்கவே என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.

இதேவேளை, நாளைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார் என மைத்ரிபால சிறிசேனவும் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவோ தமக்கு 'பதவி' முக்கியம் இல்லையென தெரிவிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment