குற்றப் பிரேரணைக்கு UNP ஆதரவளிக்காது: மைத்ரி - ரணில் டீல்! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

குற்றப் பிரேரணைக்கு UNP ஆதரவளிக்காது: மைத்ரி - ரணில் டீல்!


ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கெதிரான குற்றப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது எனவும் அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.


இன்று வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் இறுதிப் பந்தியில் இது தொடர்பில் விளக்கமளித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதியுடன் கூட்டுறவோடு இயங்கவுள்ளதாக தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்ற கலைப்பூடாக அரசியல் சட்டத்தை ஜனாதிபதி மீறியுள்ளதாகவும் அவர் எதோச்சாதிகாரமாக நடந்து கொண்டால் குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வரவுள்ளதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment