அப்படிச் சொன்னது எனது தனிப்பட்ட 'கருத்து': மைத்ரி விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

அப்படிச் சொன்னது எனது தனிப்பட்ட 'கருத்து': மைத்ரி விளக்கம்!


நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கப் போவதில்லையென தான் தெரிவித்தமையானது தனிப்பட்ட கருத்தெனவும் அதுவே தொடர்ந்தும் தமது நிலைப்பாடெனவும் விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.எனினும் நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து இன்று மீண்டும் ரணிலை பிரதமராக நியமித்துள்ளதாகவும் அவர் மேலதிக விளக்கமளித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமரானால் ஒரு மணி நேரம் கூட தனது பதவியில் இருக்க மாட்டேன் என முன்னர் மைத்ரி தெரிவித்திருந்தார்.

அதேவேளை, நாடாளுமன்றில் ஆகக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கே ஆட்சி அதிகாரம் வழங்குவது வழமையென மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்தமையும் ரணில் விக்கிரமசிங்க ஏலவே 117 பேரின் ஆதரவை நிரூபித்ததன் மூலம் ஆகக்கூடிய உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவராக உருவெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment