மஹிந்தவை 'பிரதமர்' என்று அழைப்பது நீதிமன்ற அவமதிப்பு: UNP எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

மஹிந்தவை 'பிரதமர்' என்று அழைப்பது நீதிமன்ற அவமதிப்பு: UNP எச்சரிக்கை!



மஹிந்த ராஜபக்ச பிரதமராக இயங்குவதற்கும் அவரது கட்சி உறுப்பினர்கள் அமைச்சு, பிரதியமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளில் வீற்றிருப்பதற்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் ஊடகங்கள் அவரை பிரதமர் என விளிப்பது நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும் என எச்சரித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.



நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் மஹிந்த ராஜபக்சவை சில ஊடகங்கள் பிரதமர் எனவே அழைப்பதாக பல தடவைகள் சபாநாயகரிடம் முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் நீதிமன்றமே தடை விதித்துள்ளதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி குறித்த வழக்கு விசாரணை இடம்பெறவுள்ள அதேவேளை 7ம் திகதிக்குள் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment