நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தாக வேண்டும்: UNP! - sonakar.com

Post Top Ad

Tuesday 18 December 2018

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தாக வேண்டும்: UNP!


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான பிரேரணையை இன்று சபையில் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அண்மைய நிகழ்வுகள் நிறைவேற்று அதிகாரத்தின் விளைவுகளுக்கு சிறந்த உதாரணமாக அமைந்ததாகவும் மலிக் சமரவிக்ரம தெரிவித்திருந்தார்.


இதன் மீதான விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்ற அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் நிலையில் அதன் பின்னர் ஜனாதிபதியொருவரை தெரிவு செய்யும் முறை மற்றும் அதிகாரங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment