அந்தரத்தில் தொங்கும் மஹிந்தவின் எதிர்காலம்: வெள்ளி வரை காத்திருப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 December 2018

அந்தரத்தில் தொங்கும் மஹிந்தவின் எதிர்காலம்: வெள்ளி வரை காத்திருப்பு!


நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கும் அதன் சார்பில் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இயங்குவதற்கும் சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் மஹிந்த ராஜபக்ச வேறு கட்சியின் உறுப்புரிமை பெற்றிருப்பதன் அடிப்படையில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வெள்ளியன்று சபாநாயகர் இது குறித்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த, நாமல் உட்பட பலர் ஒக்டோபர் 26 மாற்றத்தைப் பயன்படுத்தி பெரமுனவில் இணைந்து கொண்ட அதேவேளை, இவ்விவகாரமும் நீதிமன்றின் முன் செல்லலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சி தேர்தலில் போட்டியிடவோ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இயங்கவோ இல்லாத நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரமுடியாது என என்று ரவுப் ஹக்கீம் சபையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment