போராட்டம் இனியும் தொடரும்: UNP அவதானம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

போராட்டம் இனியும் தொடரும்: UNP அவதானம்!50 நாள் போராட்டத்தின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி முழு மனதுடன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லையென அவதானத்துடன் தெரிவிக்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சியினர்.


சட்டரீதியான பிரதமர் நியமனத்தை அரச ஊடகங்கள் கூட நேரடியாக ஒளிபரப்பத் தவறிய அதேவேளை, பதவிப்பிரமான நிகழ்வுக்கு ஊடகங்களை அனுமதிக்கவும் ஜனாதிபதி மறுத்திருந்த நிலையில் சற்று முன்னர் ரணில் பதவியேற்றுள்ளார்.

எனினும், ஜனாதிபதி முழு இணக்கப்பாட்டுடன் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லையெனவும் அவரால் மேலும் இடையூறுகள் தொடரும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment