
நீதிமன்ற தலையீட்டின் ஊடாக சட்டவிரோத அரசும் அரசியல் சூழ்ச்சியும் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.
மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் தனக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத பிரதமர் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவதாக தனது புதல்வர் நாமல் ஊடாக அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்திருந்த நிலையில், தமது அரசியல் எதிர்கால நலன் கருதி மஹிந்த ராஜபக்ச ஒதுங்கிக் கொள்ளத் தீர்மானித்துள்ளார். இதேவேளை மஹிந்த அணியினர் தொடர்ந்தும் மைத்ரியோடு இணைந்து கூட்டணி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment