புதிய அரசமைக்க மைத்ரி முஸ்தீபு: UNP காலக்கெடு! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

புதிய அரசமைக்க மைத்ரி முஸ்தீபு: UNP காலக்கெடு!திங்கட் கிழமைக்குள் புதிய அரசாங்கம் ஒன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றை ஜனாதிபதி கலைக்க முற்பட்டமை சட்டவிரோதம் என தீர்ப்பளித்துள்ள நிலையில் 24 மணி நேரத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அரசமைக்க அனுமதிக்க வேண்டும் என ஐ.தே.க தரப்பு நா. உறுப்பினர்கள் காலக் கெடு விதித்துள்ளனர்.

எனினும், நாளை மஹிந்தவின் மேன்முறையீடு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதன் பின்னரே ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment