நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு செவி சாய்க்க மைத்ரி விருப்பம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு செவி சாய்க்க மைத்ரி விருப்பம்!


உச்ச நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவரது பேச்சாளர், நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ளவர்கள் ஆட்சியமைக்க வழி விடுவதற்கு ஜனாதிபதி இணக்கப்பாட்டுடன் உள்ளதாக தெரிவிக்கிறார்.ஜனாதிபதி ஊடக பிரிவின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ள அதேவேளை கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துக்கள் ஜனாதிபதியுடைய கருத்துக்களில்லையென மறுக்கிறார்.

எனினும், ஜனாதிபதி இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் இதுவரை வெளியிடவில்லையென்பதோடு மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு தொடர்பிலான உச்ச நீதிமன்றின் அபிப்பிராயமறிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பொன்றை மேற்கொள்வார் என ஜனாதிபதி செயலக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment