முறைப்படி நாடாளுமன்றைக் கலைக்க வேண்டும்: அநுர! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

முறைப்படி நாடாளுமன்றைக் கலைக்க வேண்டும்: அநுர!


நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சட்டவிரோதமாக கலைக்க முற்பட்டமை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அரசியல் சூழ்ச்சியின் சூத்திரதாரிகளை தண்டிப்பதோடு நாடாளுமன்றை முறையாகக் கலைத்து தேர்தலை நடாத்த வேண்டும் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.20ம் சட்டத் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வேண்டியதன் அவசியம் தற்போது மேலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், நாட்டை அரசியல் சூழ்ச்சிக்குள் தள்ளியவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றில் முறையாகப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து நாடாளுமன்றைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராகத் தொடர முடியாது என தீர்க்கமான தீர்ப்பு வெளியானால், மீளவும் தமது அரசை நிறுவி தேர்தலை நடாத்தப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment