ரணிலுக்குத் தான் பிரதமர் பதவி: UNP எழுத்து மூலம் அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 1 December 2018

ரணிலுக்குத் தான் பிரதமர் பதவி: UNP எழுத்து மூலம் அறிவிப்பு!


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே என மீண்டும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது அக்கட்சி.தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய முன்னணி அரசை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்பதை அறிவித்துள்ளதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கே 117 பேரின் ஆதரவிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 5ம் திகதி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கக் கோரி பிரேரணை நிறைவேற்றும்படி மைத்ரி தெரிவித்துள்ளமையும் நாடாளுமன்றை கலைத்தமை சட்டவிரோதம் என மைத்ரி உணர்ந்திருப்பதாக அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment