UNF - SLFP இணைந்து ஆட்சியை முன்னெடுக்க 'புதிய' பொறிமுறை - sonakar.com

Post Top Ad

Saturday 1 December 2018

UNF - SLFP இணைந்து ஆட்சியை முன்னெடுக்க 'புதிய' பொறிமுறை


மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லை என்பதை இதற்கு மேலும் நிராகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு மைத்ரிபால சிறிசேன வந்துள்ளதாக நம்பப்படும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து எஞ்சியிருக்கும் காலத்துக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கான புதிய ஆலோசனைத் திட்டம் இவ்வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


டிசம்பர் 5ம் திகதி ஜனாதிபதி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கையை நாடாளுமன்ற பிரேரணையாக நிறைவேற்றி அதன் மீது வாக்கெடுப்பை நடாத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார் மைத்ரி.

இந்நிலையிலி, ஐக்கிய தேசிய முன்னணியுடனான நேற்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதுடன் நாளை ஞாயிறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. தற்சமயம் மைத்ரி சாதகமான பதிலையே தந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினரும் தெரிவிக்கின்றனர். எனினும், தற்போது நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கின்ற மஹிந்த அணி, டிசம்பர் 5ம் திகதி வாக்கெடுப்பை நடாத்த விடாது சர்ச்சையில் ஈடுபடக்கூடும் எனும் அச்சமும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment