நான்கு நாள் நாடாளுமன்ற அமர்வுக்கு 2.6 கோடி ரூபா செலவு! - sonakar.com

Post Top Ad

Saturday, 1 December 2018

நான்கு நாள் நாடாளுமன்ற அமர்வுக்கு 2.6 கோடி ரூபா செலவு!


கடந்த 23, 27,29 மற்றும் 30ம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்ற நிலையில் அத்றகான செலவு இரண்டு கோடி அறுபது லட்ச ரூபாய் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற நிதிப் பிரிவே இத்தகவலை வெளியிட்டுள்ளதுடன் நாடாளுமன்ற ஊழியர் ஊதியங்கள், எரிபொருள், பாதுகாப்பு, மின்சாரம், உணவு மற்றும் குடிபானங்கள் போன்றவற்றிற்கான செலவு இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த அணி சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் சராகரியாக ஒரு நாளின் செலவு 6.5 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றமையும் மஹிந்த அணியினரால் உருவாக்கப்பட்ட சேதங்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment