தோல்வியை பொறுக்க முடியாமல் TNA மீது பாய்கிறார்கள்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

தோல்வியை பொறுக்க முடியாமல் TNA மீது பாய்கிறார்கள்: சம்பிக்க


பின் கதவால் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டுள்ள சூழ்ச்சிக்காரர்களான மஹிந்த அணியினர், ஜனநாயகத்துக்குத் துணை நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது வேடிக்கையானது என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


இனவாத அரசியல் தளத்திலிருந்தே தனது பயணத்தை ஆரம்பித்த சம்பிக்க ரணவக்க, கடந்த சில மாதங்களாக ஜனநாயக வாதியாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில், வடக்கில் முன்னாள் புலிகளுடன் உறவை வைத்துக் கொண்டுள்ள மஹிந்த தரப்பு ஜனநாயகத்துக்காக முன் நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடுவது கேலிக்கூத்து என சம்பிக்க தெரிவிக்கிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் முஸ்லிம் காங்கிரசின் தனி அலகு கோரிக்கையை இனவாத பிரச்சாரமாக்காமல் முறியடிப்பதில் சம்பிக்க மற்றும் அத்துராலியே ரதன தேரர் பாரிய பங்களித்திருந்தமையும் ஜாதிக ஹெல உறுமயவே பொது பல சேனாவின் பிறப்பிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment