
ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்ட மைத்ரிபால சிறிசேனவை முழந்தாழிட வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஏற்பாட்டில் காலி முகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், மைத்ரிபாலவை ஜனாதிபதி பதவியில் அமர வைத்தவர்கள் எனும் அடிப்படையில் அவரைக் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் உரிமை தமது கட்சிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவியை வழங்கி விட்டு சுமார் 40 நிமிடம் ரணில் உட்பட கட்சியினருக்கு எதிராக மைத்ரி விளக்கவுரையொன்றை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment