ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையே ஒரே வழி: TNAயும் ஆதரவு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையே ஒரே வழி: TNAயும் ஆதரவு!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதே ஒரே வழியென தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.

நாட்டின் அரசியல் சட்டவிதிகளை மீறி ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்குகள் மீது விசாரணை இடம்பெற்று வருகிறது.எனினும், மைத்ரிபால சிறிசேன தொடர்ந்தும் உளறி வருவதாகவும் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்று கொண்டு வருவதே ஒரே வழியெனவும் ஜனாதிபதியின் நேற்றைய உரையின் பின் மங்கள தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப்பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என வெளியான கருத்தினை மறுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி தமது தவறுகளை உடனடியாக திருத்தினால் பிரேரணையை ஆதரிக்க மாட்டோம் என்று தான் கூறினோம் என விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment