சர்வாதிகாரத்தின் பிடியில் நாடு: UNP கவலை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

சர்வாதிகாரத்தின் பிடியில் நாடு: UNP கவலை!


நாட்டுக்குப் பிரதமரோ, அரசாங்கமோ இல்லாத நிலையில் சர்வாதிகாரம் தலையோங்கி விட்டதாகவும் மைத்ரிபால சிறிசேன சர்வாதிகாரியாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அதிகாரங்களையும் தன் வசப்படுத்தியுள்ள மைத்ரியின் சர்வாதிகார ஆட்சியே தற்போது நிலவுவதாக அக்கட்சி தெரிவிக்கிறது.

உச்ச நீதிமன்றில் வழக்காடப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்ற அமர்வு 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment