அரசில் SLFPயினர் இணைவதற்கு ஆதரவாளர்கள் எதிர்ப்பு: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Saturday, 15 December 2018

அரசில் SLFPயினர் இணைவதற்கு ஆதரவாளர்கள் எதிர்ப்பு: ஹர்ஷ


நாளைய தினம் மீண்டும் நியமிக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை இணைத்துக் கொள்வதற்குத் தமது ஆதரவாளர்கள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் மஹிந்த எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த போதிலும் பலர், கட்சி தாவி ஐக்கிய தேசியக் கட்சியைக் கைவிட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் நாளை ரணில் பிரதமரானதும் ஐக்கிய தேசிய முன்னணி அரசு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டிணைவது தொடர்பில் அதிருப்தியும் அதிர்ச்சியும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment