அந்நிய நாடுகளின் 'செல்வாக்கு' அதிகரித்து விட்டது: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday, 15 December 2018

அந்நிய நாடுகளின் 'செல்வாக்கு' அதிகரித்து விட்டது: மைத்ரி!


இலங்கை மீதான அந்நிய நாடுகளின் செல்வாக்கு (ஆதிக்கம்) அதிகரித்து விட்டதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


முற்காலங்களில் இடம்பெற்ற அந்நிய ஆக்கிரமிப்புகளை விட வேறுபட்ட வகையில் தற்போது ஆதிக்கம் அதிகரித்திருப்பதாகவும் நாட்டு மக்கள் தாய்நாட்டின் எதிர்காலம் கருதி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இன்று தியதலாவ இராணுவ கல்வியியற் கல்லூரி நிகழ்வில் உரையாற்றுகையில் மைத்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மேற்குலகு சார்ந்து செயற்படுகின்ற அதேவேளை மஹிந்த தரப்பு சீனா சார்ந்து செயற்பட்டு வந்தமையும் தற்சமயம் பாரிய வெளிநாட்டு கடன் சுமையோடு இலங்கை நிர்வாகம் செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment