மொட்டுச் சின்னமே SLFPன் எதிர்காலம்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Saturday, 8 December 2018

மொட்டுச் சின்னமே SLFPன் எதிர்காலம்: பிரசன்ன


ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் எதிர்காலம் பொதுஜன பெரமுனவிலேயே தங்கியிருப்பதாகவும் மொட்டுச் சின்னமே இனி அடையாளம் என்கிறார் பிரசன்ன ரணதுங்க.


தமது தொகுதி பெரமுன கூட்டத்தில் அண்மையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கின்ற அவர், சுதந்திரக் கட்சி இதற்கு மேலும் சிந்திப்பதற்கு எதுவும் இல்லையென தெரிவிக்கிறார்.

மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் உருவான பெரமுனவின் பினாமி தலைவராக ஜி.எல் பீரிஸ் காட்சிப்படுத்தப்படுகின்ற போதிலும் அண்மையில் மஹிந்த மற்றும் நாமல் அக்கட்சி உறுப்புரிமை பெற்றுள்ளதோடு தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி பல சு.க முக்கியஸ்தர்களும் பெரமுனவில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment