பெரமுனவில் சேராத SLFPயினருடன் கூட்டணி: UNF தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Friday, 14 December 2018

பெரமுனவில் சேராத SLFPயினருடன் கூட்டணி: UNF தீர்மானம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளாது தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக உறுப்பினர்களாக இருந்து வருவோடு மாத்திரமே எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பது என தீர்மானித்துள்ளது ஐக்கிய தேசிய முன்னணி.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க தலைமையிலான அணி மஹிந்த ராஜபக்ச அணியோடு இணைந்தியங்க மறுத்து வருகிறது. இதேவேளை, எதிர்கால கூட்டணியொன்றை அமைப்பதென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் ஐ.தே.முன்னணியினர் நேற்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

பெரும்பாலும் ரணில் தலைமையில் மீண்டும் அரசமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment