அரசை விட்டு விலக நிர்ப்பந்தம்; தீர்ப்பு வரட்டும் என்கிறார் மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Friday, 14 December 2018

அரசை விட்டு விலக நிர்ப்பந்தம்; தீர்ப்பு வரட்டும் என்கிறார் மஹிந்த!


நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் என நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியிடம் அரசமைக்கும் அதிகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே பல UPFA உறுப்பினர்களின் கருத்தாகவும் வெளிப்பட்டிருக்கிறது.எனினும். தாமாக விலகிக் கொள்ள மறுத்துள்ள மஹிந்த ராஜபக்ச, தமது மற்றும் அமைச்சரவை நியமனம் தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு வரட்டும் என தெரிவிப்பதாக ஸ்ரீலசுகட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வழக்கின் விசாரணைக்கு ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை தமது அரசு சட்டரீதியானதா இல்லையா என்பதில் தெளிவில்லையென மஹிந்த தெரிவிப்பதாக அறியமுடிகிறது. இதற்கிடையில் திங்கட்கிழமைக்குள் புதிய அரசொன்று அமையப்பெறும் என ஐமசுகூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment