மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்: SB நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Saturday, 15 December 2018

மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்: SB நம்பிக்கை!


மஹிந்த ராஜபக்சவுக்க எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எஸ்.பி திசாநாயக்க.


ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்ததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இயங்கும் அருகதையை இழந்து விட்டதாகவும் 18ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் எஸ்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 26ம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தானாக விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ள அதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற பதவிகளில் மாற்றம் வருமா என்பது சந்தேகத்துக்குரியதாகும்.

No comments:

Post a Comment