ஊழல் ஆட்சி தொடர அனுமதிக்க மாட்டோம்: JVP - sonakar.com

Post Top Ad

Saturday, 15 December 2018

ஊழல் ஆட்சி தொடர அனுமதிக்க மாட்டோம்: JVPதற்போது மீண்டும் கிடைத்திருக்கும் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி தமது மத்திய வங்கி ஊழல் விவகாரங்களை மூடி மறைக்கவோ, கடந்த மூன்றரை வருடங்கள் அனுபவித்த சுக போகங்களைத் தொடர்ந்து ஊழல் ஆட்சி நடாத்துவதற்கோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுமதியளிக்கப் போவதில்லையென்கிறது மக்கள் விடுதலை முன்னணி.இன்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவதற்கு ஆதரவு வழங்க மறுத்த போதிலும் ஒக்டோபர் 26 சூழ்ச்சியை முறியடிப்பதற்கே தாம் ஆதரவு வழங்கியதாக ஜே.வி.பி விளக்கமளித்து வரும் நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment