ரணில் MP பதவி வகிப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 December 2018

ரணில் MP பதவி வகிப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல்!


மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி வகிப்பதற்கான தகுதியை விளக்கக் கோரி 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த வழக்கைப் போன்று ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதன் அடிப்படைத் தகுதி விளக்கப்பட வேண்டும் எனக் கோரி Writ of Quo Warranto வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த வழக்கின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு 12ம் திகதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நாளைய தினம் ரணில் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரேரணையொன்று நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் அதன் விசாரணை முடியும் வரை ரணில் இடை நீக்கம் செய்யப்படுவார் என மஹிந்த தரப்பு மனுதாரர்கள் எதிர்பார்க்கின்றமையும் கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பெருமளவு விருப்பு வாக்குகளைப் பெற்றே ரணில் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment