அக்குறணை பி.ச வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்: எ.கட்சி புறக்கணிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 December 2018

அக்குறணை பி.ச வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்: எ.கட்சி புறக்கணிப்பு!


அக்குறணை பிரதேச சபையின் 2019 ம் ஆண்டுக்கான வரவு செலுவுத் திட்டம் இன்று 11 ம் திகதி மாலை எதிர்கட்சியினரின் சபை பகிஷ்கரிப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பின்றி நிறை வேற்றப்பட்டது.


இன்று மதியம் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே வரவு-செலவுத் திட்டம் சபைத் தலைவர் இஸ்திஹாரினால் முன் வைக்கப்பட்டிருந்த அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்திருந்தனர்.

எனினும், வாக்கெடுப்பு எதுவுமின்றி வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்படடதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-மொஹொமட்  ஆஸிக்

No comments:

Post a Comment