ஜனநாயக வெற்றியை பொறுப்புடன் முன்னெடுப்போம்: சஜித் - sonakar.com

Post Top Ad

Saturday, 15 December 2018

ஜனநாயக வெற்றியை பொறுப்புடன் முன்னெடுப்போம்: சஜித்
நாட்டின் அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனதும் பொறுப்பென்பது உணர்த்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் கிடைக்கப் பெற்ற ஜனநாயக வெற்றியை பொறுப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.


இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், ஊழலற்ற புதிய இலங்கையொன்றை உருவாக்கி சுபீட்சமான எதிர்காலத்தை மக்களுக்கு வழங்குவது தமது பொறுப்பெனவும் சூழ்ச்சியை முறியடித்து உண்மைக்கு கிடைத்திருக்கும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள தமது கட்சி தியாகத்துடன் பணியாற்றும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி அரசில் பாரிய ஊழல்கள் நடந்ததாக மைத்ரி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment